Sep 28, 2011

First Day of Navarathiri - Durga

இன்று தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.


பாடல்: கற்பகவல்லி நின்
ராகம்: ராகமாலிகா
ராகம்: ஆனந்த பைரவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)

ராகம்: கல்யாணி

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)

ராகம்: பாகேஸ்ரீ

நாகே‌‌ஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)

ராகம்: ரஞ்சனி

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா (கற்பகவல்லி)

No comments:

Post a Comment