நம் கானகத்தில்
இலையுதிர் காலம் -
கருங்குயில் இல்லா
நிசப்த வேளை இது!
இலையுதிர் காலம் -
கருங்குயில் இல்லா
நிசப்த வேளை இது!

வெட்டுகிளிகளாய் சுற்றி திரிந்த நாம்
இன்று
காலத்தின் பிடியில்
தேன் சேகரிக்கும் வண்டுகளாய்...

மழையின் ஈரம் வற்றி இருக்க...
எங்கோ கேட்கும் ரீங்காரம்
மறந்த நம் நினைவுகளை எப்போதாவது
தட்டி எழுப்ப...

காட்டின் அசைவில்
சல சலக்கும் சருகின் ஒசை போலும்...

மனதின் இளமையும்
மழைத்தூறலும்
ஈரக்காற்றும்
பச்சை புல்வெளியும்
குயிலின் இசையும் கலந்து விரவிய
கடந்து போன வசந்த காலம்
பற்றிய பசுமை நினைவுகளுடன்
நாம்...

இலையுதிர் காலம் -
கருங்குயில் இல்லா
நிசப்த வேளை இது!
