Sep 15, 2011

அறிஞர் அண்ணா - செப் ௧௫

இன்று பிறந்த நாள்
இன்று சிறந்த நாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்...!


ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு' (Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள்.

          உடனடியாக அண்ணா சொன்னார் -

              “No sentence ends with because because because is a conjuction".

  • அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

          "ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

         (“I know UNO. I know, you know UNO. But you don’t know, I know UNO” )



No comments:

Post a Comment